BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் முடிவடைந்தது - அமெரிக்காவில் இருந்து வந்த அபிஜீத் திப்கே என்ன பேசினார்?
சனிக்கிழமை அதிகாலையில்,காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு வந்தடைந்தார். பின்னர் அவர், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினார்.
பெட்ரோல், டீசல் விலையால் மின்சாரக் கார்களை நோக்கி நகரும் இந்தியர்கள் - களத்தில் தடையாக இருப்பது என்ன?
2026ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில், மின்சாரக் கார்களின் சந்தை 25 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே வேளையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்கள் 5 சதவீதம் என்ற முக்கிய எல்லையைத் தாண்டின. இந்த எண்ணிக்கை பெரும்பாலும் பெருமளவிலான சந்தைப் பயன்பாட்டுக்கான ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
எவரெஸ்ட் சிகரத்தில் 'சாக்லேட், பனிக்கட்டியை உண்டு' 6 நாட்கள் உயிர் பிழைத்த வழிகாட்டி
கடைசியாக உயிருடன் காணப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு, எவரெஸ்ட் சிகரத்திலிருந்து தவழ்ந்து இறங்கிக்கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட நேபாள வழிகாட்டி, "பனிக்கட்டி" மற்றும் தனது சட்டைப்பையில் இருந்த சில சாக்லேட்டுகளைச் சாப்பிட்டதன் மூலமும் உயிர் பிழைத்ததாக பிபிசியிடம் கூறியுள்ளார்.
டி20 கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டது ஏன்? சச்சின் சாதனையை முறியடிப்பாரா சூர்யவன்ஷி?
2026ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான டி20 அணிகளை பிசிசிஐ சனிக்கிழமை அறிவித்தது. ஸ்ரேயாஸ் ஐயர் இனி இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இருப்பார். வைபவ் சூர்யவன்ஷியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
திமுக இந்தியா கூட்டணியை உடைத்து மூன்றாவது அணியை உருவாக்க நினைக்கிறதா?
ஜூன் 8ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள 'இந்தியா' கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணியை விட்டு திமுக விலகுகிறதா? தேசிய அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?
காணொளி, காணொளி: டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் ஏன்? இளைஞர்கள் கூறுவது என்ன?, கால அளவு 6,12
காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டத்தின் முழு பின்னணி என்ன? போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்த கருத்துக்கள் என்ன? விரிவாக பார்க்கலாம் இந்த காணொளியில்.
மோதியுடனான நட்பு குறித்து பேசி இந்தியாவுக்கு அழுத்தம் தருவதாக டிரம்ப் மீது விமர்சனம் ஏன்?
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்; ஆனால், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் புதிய சுங்கவரி முன்மொழிவு நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளது.
நிலவில் தளம் அமைப்பதில் உள்ள சவாலுக்கு சந்திரயான்-3 கண்டுபிடிப்பு தரும் புதிய தீர்வு
நிலவில் மனித குடியிருப்புகளைக் கட்டமைக்க, விண்வெளி தளங்களை உருவாக்க இருக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ச்சியாளர்கள் நெடுங்காலமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரோவின் சந்திரயான்-3 மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய தகவல்கள் அந்த முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கின்றன.
நார்வே செஸ்: கடைசி இடத்தில் இருந்து மீண்டு வந்து சாம்பியன் - பிரக்ஞானந்தாவுக்கு அம்மா சொன்ன 'மந்திரம்'
நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம், அந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இறுதிச்சுற்றில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமரை வீழ்த்தியதன் மூலம் பிரக்ஞானந்தா முதன் முறையாக இந்த தொடரில் சாம்பியன் ஆனார்.
'மீண்டும் நீட் தேர்வு எழுத தைரியம் இல்லை': நாக்பூரில் மாணவி மரணம் - போலீஸ் கூறுவது என்ன?
நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. மறுதேர்வுக்கான தேதியை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது மாணவர்களுக்கு கடினமான சூழலை உருவாக்கியுள்ளது.
சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதாகி நின்றதால் குடிநீரின்றி தாகத்தால் 49 பேர் பலி
வடக்கு நைஜரில் உள்ள சஹாரா பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில், தங்களை ஏற்றிச் சென்ற டிரக் பழுதானதைத் தொடர்ந்து குறைந்தது 49 பேர் தாகத்தால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணொளி, காணொளி: 4 அடி அகலமே கொண்ட வீட்டில் நான்கு தலைமுறைகளாக வசிக்கும் குடும்பம், கால அளவு 2,23
இரு கைகளையும் விரித்தால் எதிரெதிர் சுவர்களைத் தொட்டுவிடும் அளவுக்குக் குறுகலான வீடு இது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு
திருச்செந்தூர முருகன் கோயில் கடந்த சில நாட்களாக கவனம் பெறும் நிலையில், இந்த கோயிலில் இருக்கும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? கோயிலின் வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் சூப்பர்ஃபுட்: 'மத்தி மீனில்' உள்ள 3 முக்கிய சத்துகள்
மத்தி மீன்களைத் தொடர்ந்து உண்பதால் கிடைக்கும் இந்த நன்மைகள் மற்றும் இதர ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
முதல்வர் விஜய் சென்ற தேவாலயத்திற்கு இந்திய வரலாற்றில் உள்ள முக்கியத்துவம் என்ன தெரியுமா?
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் புனித மேரி தேவாலயம் சுமார் 345 ஆண்டுகள் பழமையானது. அதன் வரலாறு என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பாகிஸ்தான், சீன நாணய மதிப்பு உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு - என்ன காரணம்?
பாகிஸ்தானிய ரூபாய் கடந்த ஓராண்டாக ஒப்பீட்டளவில் நிலையாக இருந்து வருகிறது. சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாணயங்களும் டாலருக்கு எதிராகக் கணிசமாக வலுப்பெற்றுள்ளன. இதற்குக் காரணம் என்ன?
வெள்ளைப் புலி என்பது தனி ஒரு புலி இனமா? நீலகிரி மாவட்டத்தில் தென்பட்ட புலி பற்றி ஆய்வாளர்கள் விளக்கம்
நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட அவலாஞ்சியில் வெள்ளைப்புலி ஒன்றை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தென்பட்ட வெள்ளைப் புலி ஒரு தனி புலி இனமா?
'நான் கண்ணீர் விட்டு அழுதேன்': மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண்கள் கூறியது என்ன?
பிரிட்டனில் தற்போது உறுப்புப் பெரிதாக்கும் சிகிச்சைகளைவிட மார்பகங்களை சுருக்கும் சிகிச்சைகளையே அதிகமானோர் தேர்ந்தெடுக்கின்றனர்
இலங்கையில் சீன திட்டங்களுக்கு இந்தியா முட்டுக்கட்டையா? சீன தூதரின் பேச்சால் எழும் விவாதம்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 'தேவையற்ற வெளி அழுத்தங்கள்' முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய சர்ச்சைக்குரிய திட்டங்களின் கள நிலவரம் என்ன? சீனத் தூதுவர் குறிப்பிடும் அந்த 'முட்டுக்கட்டைகள்' மற்றும் 'முதலீட்டு முயற்சிகள்' எத்தகையவை?
வெயில் 40 டிகிரி தாண்டினால் உடலில் என்ன நடக்கும்? உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைக்க எளிய வழிகள்
வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































