1912
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |

1912 (MCMXII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 1 - சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.
- ஜனவரி 8 - ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
- மார்ச் 1 - ஆல்பேர்ட் பெரி என்பவர் ஓடும் விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் குதித்த முதலாவது மனிதரானார்.
- ஏப்ரல் 14 - டைட்டானிக் கப்பல் 11:40 மணிக்கு பனிப்பாறையுடன் மோதியது.
- ஏப்ரல் 15 - டைட்டானிக் கப்பல் 2:20 மணிக்கு 1,494 பேருடன் மூழ்கியது.
- மே 26 - இலங்கையில் இருந்து 7 பேரடங்கிய முதல் தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
- ஜூன் 5 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் கியூபாவில் இறங்கினர்.
- அக்டோபர் 8 - மொண்டெனேகிரோ துருக்கி மீது போரை அறிவித்தது.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 27 - சோரா சேகல், இந்தியத் திரைப்பட நடிகை (இ. 2014)
- மே 12 - மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (இ: 1979)
- ஆகஸ்ட் 12 - சோ. சிவபாதசுந்தரம், வானொலி ஒலிபரப்பாளர், பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை எனப் பெயரிட்டவர் (இ. 2000)